முழு காவி நிறமாக மாறிய டிடி செய்திகள் லோகோ

67பார்த்தது
முழு காவி நிறமாக மாறிய டிடி செய்திகள் லோகோ
மத்திய அரசுக்குச் சொந்தமான செய்தித் தொலைக்காட்சியான டிடி நியூஸ் தனது லோகோவின் நிறத்தை பிரகாசமான சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறமாக மாற்றியமைத்துள்ளது. லோகோவின் மாற்றம் அதன் புதிய சானல்களில் நடைமுறைக்கு வந்துள்ளது. இது குறித்து டிடி நியூஸ் எக்ஸ் தளத்தில், "எங்கள் மதிப்புகள் அப்படியே இருக்கும் போது, ​​நாங்கள் இப்போது புதிய அவதாரத்தில் இருக்கிறோம். முன்னெப்போதும் இல்லாத செய்தி பயணத்திற்கு தயாராகுங்கள். புதிய டிடி செய்திகளை அனுபவியுங்கள்!” என வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. மத்திய அரசு அனைத்தையும் காவி மயமாக மாற்றி வருதாக ஏற்கனவே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஊடக நிறுவனத்தையும் மத்திய பாஜக அரசு விட்டு வைக்கவில்லை.

தொடர்புடைய செய்தி