ரீ ரிலீஸில் சாதனை படைத்த கில்லி

76பார்த்தது
ரீ ரிலீஸில் சாதனை படைத்த கில்லி
தரணி இயக்கத்தில் விஜய் மற்றும் திரிஷா ஆகியோரது நடிப்பில் 2004ஆம் ஆண்டு ரிலீஸாகி மெகா ஹிட்டான படம் ‘கில்லி’. தமிழ் சினிமாவில் ரூ.50 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்கிற சாதனையை படைத்தது. தற்போது இந்த படம் 4K டிஜிட்டல் தரத்தில் வருகிற ஏப்ரல் 20ஆம் தேதி ரீ ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், தற்போது ‘கில்லி’ படம் புதிய சாதனையை படைத்துள்ளது. அதன்படி, ரீ ரிலீஸான படங்களில் அதிகமாக முன்பதிவு செய்யப்பட்ட படமாக ‘கில்லி’ இருப்பதாக ரோகினி தியேட்டர் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி