அமித்ஷா செயலுக்கு கேரள காங்கிரஸ் கண்டனம்!

60பார்த்தது
அமித்ஷா செயலுக்கு கேரள காங்கிரஸ் கண்டனம்!
சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் தமிழிசை சௌந்தரராஜனை கண்டித்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கேரள காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. கேரள காங்கிரஸ் எக்ஸ் தள பக்கத்தில், “இதுதான் பெண்களுக்கு எதிரான பாஜகவின் கலாசாரம் மற்றும் நடத்தை. சுயமரியாதை உள்ளவராக இருந்தால், தக்க பதிலடி கொடுத்து தமிழிசை கட்சியில் இருந்து விலக வேண்டும். மருத்துவரும், முன்னாள் ஆளுநருமான நீங்கள், சரித்திரப் பதிவேடு குற்றவாளியிடம் இருந்து, இதுபோன்ற அவமதிப்பை சகித்துக் கொள்ளக் கூடாது!” என பதிவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி