கொடைக்கானல் நட்சத்திர ஏரிக்குள் பாய்ந்த கார்..! (வீடியோ)

83பார்த்தது
கொடைக்கானல் மேல்மலை கிராமமான புதுபுத்தூரில் இருந்து ஜெயபிரகாஷ் என்பவர் பொலிரோ காரில் தனது குடும்பத்தினருடன் வந்துள்ளார். அப்போது ஏரிச்சாலை அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, அதிவேகம் காரணமாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இரு பெண்களை இடித்து தள்ளியது. பின்னர் கட்டுப்பாட்டை இழந்த கார், நட்சத்திர ஏரிக்குள் பாய்ந்தது. ஜீப்பில் இருந்த இருவரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். கீழே விழுந்து படுகாயமடைந்த பெண்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி