தீயில் இருந்து தப்ப கட்டிடத்தில் இருந்து கீழே குதித்தவர்கள் பலி

84பார்த்தது
தீயில் இருந்து தப்ப கட்டிடத்தில் இருந்து கீழே குதித்தவர்கள் பலி
குவைத் நாட்டில் உள்ள 6 மாடி கட்டிடத்தில் இன்று (ஜூன் 12) அதிகாலை ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இதில் பலரும் தீயில் கருகியும், புகையால் மூச்சுத்திணறியும் இறந்தனர். சிலர், கட்டிடத்தில் தீ பரவுவதை பார்த்த பயத்தில் பெரிதும் பதட்டமடைந்திருக்கின்றனர். இதையடுத்து என்ன செய்வது என தெரியாமல் கட்டிடத்தில் இருந்து கீழே குதித்தனர். இதில் படுகாயமடைந்து அவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி