குழந்தை தொழிலாளர்களை கண்டால் என்ன செய்ய வேண்டும்.?

77பார்த்தது
குழந்தை தொழிலாளர்களை கண்டால் என்ன செய்ய வேண்டும்.?
குழந்தை தொழிலாளர்களை எங்காவது பார்த்தால் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது மாஜிஸ்திரேட்டிடம் புகார் அளிக்க வேண்டும். அவர்கள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், தேசிய சைல்டு ஹெல்ப்லைனை அணுகலாம். 1098 என்கிற எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் குழந்தை தொழிலாளர்களை மீட்கலாம். அருகில் இருக்கும் தொண்டு நிறுவனங்கள் அல்லது சேவை நிறுவனங்களை அணுகலாம். தேசிய குழந்தைகள் நல ஆணையத்திற்கு எழுத்துப்பூர்வமாகவோ, அல்லது இ-மெயில் அல்லது ஆன்லைன் மூலமாகவோ புகார் அளிக்கலாம்.

தொடர்புடைய செய்தி