குவைத் விபத்து: உடனடி நடவடிக்கை தேவை - ராமதாஸ்

66பார்த்தது
குவைத் விபத்து: உடனடி நடவடிக்கை தேவை - ராமதாஸ்
குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு தமிழர்கள் உட்பட 43 பேர் தீயில் கருகி பலியாகியுள்ளனர் .இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், இறந்த தமிழர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வரவும், அவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்று தரவும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைந்து வர வேண்டும். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்கள்” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி