மத்தியப் பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்பட்ட CUTE UG 2024 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய தேர்வு முகமை (என்டிஏ) இன்று முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் தங்களது மதிப்பெண் அட்டையை exams.nta.ac.in/CUET என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண் அட்டையை பதிவிறக்கம் செய்ய விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும்.