நல்லூர்: தார் சாலை அமைக்க பூமி பூஜை
கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியம் சிறுநெசலூர் ஊராட்சியில் அயோத்திதாசர் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் மூலம் சுமார் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்க ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா வேல்முருகன் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். அப்போது நல்லூர் ஊராட்சி ஒன்றிய அரசு பொறியாளர் ராஜேந்திரன், ஒப்பந்ததாரர் ஸ்ரீமுஷ்ணம் ஹரி மற்றும் கிராம பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.