கடலூர் : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபர் கைது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை போலீஸ் ஏட்டு வேதவேந்தன் என்பவர் நேற்று முன்தினம் (நவம்பர் 13) காலை பாஸ்போர்ட் விண்ணப்பித்த நபரின் வீட்டிற்கு விசாரணைக்கு சென்றிருந்தார். அப்போது முல்லை நகரில் பொது இடத்தில் ஆபாசமாக அறுவறுக்கத் தக்க வகையில் பேசிக் கொண்டிருந்த வாலிபரை எச்சரித்தும் செல்லவில்லை. இது குறித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பொட்டா வழக்குப் பதிவு செய்து முல்லை தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் யோகேந்திரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.