வாழ்நாள் கல்வி சாதனையாளர் விருது வழங்கல்.

56பார்த்தது
வாழ்நாள் கல்வி சாதனையாளர் விருது வழங்கல்.
விருதுநகரில் அமைந்துள்ள காமராஜர் பொறியல் தொழில்நுட்ப கல்லூரியில் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 122 ஆவது பிறந்தநாளினை கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டத் திருவிழா நடைபெற்றது,

இதில் கல்விப் பணியில் சாதனையாளர்கள் மற்றும் பண்பாடு சமூகம் சார்ந்த சேவைகளை பாராட்டி தமிழக ஆளுநர் மேதகு ஆர். எம். ரவி கரங்களால் பல துறை சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

இதில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பெண்ணாடத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக போத்திரமங்கலம்
ஸ்ரீ விநாயகா பள்ளி , மற்றும் பெண்ணாடம் பாரதி மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் எஸ் மங்கையர்க்கரசி சீனிவாசன் அவர்களுக்கு வாழ்நாள் கல்வி சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இதில் அன்னை பத்திரகாளி அறக்கட்டளை நிறுவன தலைவர் நா. து. முருகானந்தம் அவர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடை பெற்றது. இதில் பள்ளியின் நிர்வாகிகள் சீனிவாசன், M. K. ராஜா நன்றி கூறினர்.

தொடர்புடைய செய்தி