நம்மாழ்வார் நினைவு நாள்.

591பார்த்தது
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம், வேப்பூர் கூட்டுச்சாலையில் புதிய தமிழா மரபு வேளாண் நடுவத்தின் சார்பாக, மரபு வேளாண் கோ. நம்மாழ்வாரின் பத்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வில் செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவத்தின் ஒருங்கிணைப்பாளர் ஐயா‌ தங்க. பன்னீர்செல்வம், அமைப்பாளர் க. முருகன், பொறுப்பாளர் கனகசபை, ஆகியோர் கலந்துகொண்டு மாலையிட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

நிகழ்வை புதிய தமிழா மரபு வேளாண் நடுவத்தின் ஒருங்கிணைப்பாளர் பொன். சபரிநாதன் தலைமையேற்று நடத்தினார்.

பொறியாளர் சுப்ரமணியராஜா நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி