திட்டக்குடி அருகே என்ஜினியர் தற்கொலை

53பார்த்தது
திட்டக்குடி அருகே என்ஜினியர் தற்கொலை
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கூடலூர் கிராமத்தை சேர்ந்த ராஜசேகரன். இவரது மகன் ராஜமகேஸ்வரன் என்ஜினீயரான இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். உடல் நிலை சரியில்லாததால் நேற்று முன்தினம் ராஜமகேஸ்வரன் தனது சொந்த ஊருக்கு வந்தார்.

இந்த நிலையில் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் ஆவினங்குடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ராஜமகேஸ்வரன் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி