மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மின்சாரக் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும், மாதாந்திர மின்கணக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.