காஞ்சிபுரம்: திமுக சார்பில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டில் எப்படியாவது ஜெயித்துவிடலாம் என மோடி என்னனமோ செய்தார். கன்னியாகுமரியில் தியானம் பண்ணி, பொங்கல் வைக்கிற மாதிரி போட்டோ எல்லாம் எடுத்தார். ஆனால், நீங்க மோடிக்கே பொங்கல் வச்சுட்டீங்க” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “சட்டப்பேரவையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் ரவி போய்விடுவார். இப்படிப்பட்ட ஆளுநர் நமக்கு தேவையா?" என்றார்.