கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடப்பதாக நெல்லிக்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நெல்லிக்குப்பம் காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடிதாங்கி சாவடியை சேர்ந்த மணிகண்டன், நத்தம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் லாட்டரி சீட்டுகள் விற்பது தெரியவந்தது. பின்னர் அவர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.