கடலூர் மாவட்டம் நெய்வேலி மத்திய பேருந்து நிறுத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் உணவகத்தின் சமையலறையில் திடீரென இன்று தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த என்எல்சி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். மேலும் தீ விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.