கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம், விழப்பள்ளம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை பஞ்சமூர்த்திகள் திருத்தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டும் இல்லாமல் இன்று பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.