தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் 100 நாள்
வேலை திட்டத்தில் ஒன்றிய அரசு முப்பதாயிரம் கோடி ரூபாய் நிதியை குறைத்ததை கண்டித்து மற்றும் மாற்று திறனாளிகளுக்கு ஆண்டுக்கு 100 நாள்
வேலை வழங்கிடவும் சட்ட கூலி ரூபா 294 வழங்கிடவும் குறிஞ்சிப்பாடி இந்தியன் வங்கி முன்பாக சங்கத்தின் ஒன்றிய தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் கோரிக்கை
ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர் ஆளவந்தார் கலந்து கொண்டு கோரிக்கையை விளக்கி பேசினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் எம் பி தண்டபாணி கட்சியின் குறிஞ்சிப்பாடி அமைப்பு குழு செயலாளர் எம் மணி கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் வி மணிவண்ணன் வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பூவை பாபு
மாற்றுத்திறனாளி சங்க ஒன்றிய செயலாளர் அமிர்தலிங்கம் மற்றும் சங்க நிர்வாகிகள் கே செல்வராஜ் எம். வைஜெயந்தி மாதர் சங்க ஒன்றிய துணைத் தலைவர் பி எழில் மாதர் சங்க ஒன்றிய துணைச் செயலாளர் P. அஞ்சு
வாலிபர் சங்க ஒன்றிய துணைச் செயலாளர் A. அறிவழகன்
மாற்றுத்திறனாளி சங்க நிர்வாகிகள்
திரு சங்கு சுந்தரமூர்த்தி சுந்தரி மற்றும் 40க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி தோழர்கள் கலந்து கொண்டனர்.