இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம்

55பார்த்தது
குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடந்த மாதம் ஆடி மாதம் என்பதால் இறைச்சி வாங்க ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலான இறைச்சி கடைகளில் ஒரு மாதத்திற்கு பிறகு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதே போல் வடலூர் பகுதியில் வாரந்தோறும் சனிக்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று வாரச்சந்தை நடைபெற்றது. இதில் அப்பகுதியில் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள ஏராளமான விவசாயிகள் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர். இதனால் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி