கடலூர் மாவட்டத்தில் இன்று(செப்.27) அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் இன்று காலை நிலவரப்படி கடலூரில் 20 மில்லி மீட்டரும், எஸ். ஆர். சி. குடிதாங்கி 13 மில்லி மீட்டரும், வானமாதேவியில் 1 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து இன்று பகலில் மழை ஓய்ந்து வெயில் அடிக்காமல் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.