சிதம்பரம்: கடலில் கவிழ்ந்த படகு..நேர்ந்த விபரீதம்

4630பார்த்தது
சிதம்பரம்: கடலில் கவிழ்ந்த படகு..நேர்ந்த விபரீதம்
கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை புதுகுப்பம் பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் ஜெயசீலன், அமுது, சக்திவேல் ஆகியோா் கடந்த 29 ஆம் தேதி பரங்கிப்பேட்டை கடலில் மீன் பிடிக்கச் சென்றனா். அப்போது, எதிா்பாராத விதமாக படகு கவிழ்ந்தது. இதில், அமுது, சக்திவேல் ஆகிய இருவரும் கடலில் நீந்தி காயங்களுடன் கரைக்கு வந்தனா்.

ஜெயசீலன் நீரில் மூழ்கி மாயமானாா். கரைக்கு வந்த மீனவா்கள் மீட்கப்பட்டு, சிதம்பரம் அண்ணாமலைநகா் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். படகு கவிழ்ந்து மாயமான மீனவா் ஜெயசீலனை தீயணைப்புத் துறையினா் மீனவா்கள் உதவியுடன் தேடும் பணியில் கடந்த 2 நாள்களாக ஈடுபட்டனா்.

இந்த நிலையில், சின்ன வாய்க்கால் கடற்கரை ஓரமாக ஜெயசீலன் ஞாயிற்றுக்கிழமை சடலமாக கரை ஒதுங்கினாா். தகவலறிந்த பரங்கிப்பேட்டை போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி