சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி விசிக வேட்பாளர் அறிமுக கூட்டம்

551பார்த்தது
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் திருமாவளவன் அறிமுக கூட்டம் சிதம்பரம் , புவனகிரி மற்றும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறிமுக செயல்வீரர்கள் கூட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் எம்எல்ஏ, இந்தியா கூட்டணிக் கட்சிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அனைத்துக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி