சிதம்பரம் - லால்பேட்டை சாலையில் லிஃப்ட் கொடுத்த வாலிபரின் கழுத்தை அறுத்த மர்ம நபர்.!!! வாகனங்களில் பயணிப்பவர்கள் தெரியாத நபர்களுக்கு லிஃப்ட் கொடுக்க வேண்டாம்.!! எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தல்.
சிதம்பரத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் லால்பேட்டை செல்வதற்காக இன்று மதியம் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ராகவேந்திர கல்லூரி அருகே சிதம்பரம் லால்பேட்டை பிரியும் மேம்பால சந்திப்பில் மர்ம நபர் ஒருவர் லிப்ட் கேட்க அவரை அமர்த்திக் கொண்டு சென்ற சிறிது நேரத்தில் அவரது கழுத்தில் கத்தியை வைத்து அறுத்திருக்கிறார். இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். காவல்துறை மர்ம நபரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.