கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது புதுச்சத்திரம் அடுத்த நஞ்சலிங்கம்பேட்டை, ஆண்டார்முள்ளிப்பள்ளம், வேளங்கிப்பட்டு ஆகிய பகுதிகளில் அரசு அனுமதியின்றி கள் விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து புதுச்சத்திரம் காவல் துறை வழக்கு பதிவு செய்து குறிஞ்சிப்பாடி ரவிகிருஷ்ணா, கண்ணன், திருநெல்வேலி ராதாபுரம் மாரியப்பன், பெருமாள், இளையான்குடி முருகையன், சிவகங்கை ஜோதிக்குடி தோமையன் ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.