கடலூர் மாவட்ட குடிமராமத்து நாயகர் எடப்பாடியார் மக்கள் நல பேரவை சார்பில் திருஅருட்பிரகாச வள்ளலார் வருவிக்க உற்ற தினத்தையொட்டி நேற்று வள்ளலார் அவதரித்த மருதூர் கிராமத்தில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அப்பகுதியில் உள்ள 150 பயனாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.