அரியலூர் மாவட்டத்தில் 6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி தமிழ் ஆசிரியர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுரேஷ் என்ற அந்த ஆசிரியர் மாணவியிடம் அத்துமீறியதோடு அது பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி வந்தார். ஆனால் பாதிக்கப்பட்ட மாணவி துணிச்சலுடன் இது தொடர்பாக புகார் அளித்த நிலையில் ஆசிரியர் சுரேஷ் மீது போக்சோவில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.