அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி

74பார்த்தது
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் நேற்று சொந்த மாவட்டமான விருதுநகரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். தொடர்ந்து சென்னை திரும்பிய நிலையில், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி