சென்னை அண்ணாநகரில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 11 வடமாநில இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். ஸ்பாவில் பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 11 இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களை மீட்ட போலீசார் ஸ்பா உரிமையாளர் உள்ளிட்டோரை கைது செய்தனர். ரூ.4 லட்சம் ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.