சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நிதானமாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் அரைசதத்தை தவறவிட்டார். அடுத்தடுத்து 3 விக்கெட்டை இழந்து இந்தியா தடுமாறிய நிலையில், அக்ஷர் பட்டேல், ஸ்ரேயஸ் ஐயர் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இந்நிலையில், 39.4 ஓவரில் நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் வீசிய பந்தில் ஸ்ரேயஸ் (48) விக்கெட்டை இழந்தார்.