அரியலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு, அரியலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், முந்திரி பயிருக்கு காப்பீடு திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். உளுந்து, நெல், மக்காச்சோளம், நிலக்கடலை ஆகிய பயிர்களுக்கு 2023-24ஆம் ஆண்டுக்கான காப்பீடு தொகையை பெற்றுத்தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.