அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு? - ஆளுநர் மாளிகை விளக்கம்

58பார்த்தது
அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு? - ஆளுநர் மாளிகை விளக்கம்
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப் பதிவுசெய்ய ஆளுநர் ரவி அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை. அது தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை” என தெளிவுபடுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி