எம்.பி செல்வராஜ் மறைவு: சீமான் இரங்கல்

578பார்த்தது
எம்.பி செல்வராஜ் மறைவு: சீமான் இரங்கல்
நாகை எம்.பி மு.செல்வராஜ் மறைவுக்கு ‘X’ தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ள நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான், “4 முறை நாகை நாடாளுமன்ற உறுப்பினராகிய பெருமைக்குரியவர். 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நாகையில் நான் பேசிய பரப்புரை கூட்டத்தில் பெருந்தன்மையுடன் கலந்து கொண்டு, என் பேச்சை ரசித்து கேட்டு வாழ்த்திய பெருந்தகை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும், நாகை மக்களுக்கும் என் ஆறுதல்களை தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன். அவருக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி