அமைச்சர் மகனின் கார் விபத்து - பதறவைக்கும் சிசிடிவி

22078பார்த்தது
திருவண்ணாமலை அருகே பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் மகனின் கார் நேற்று மற்றொரு காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த கார் ஏந்தல் புறவழிச்சாலை நான்கு முனை சந்திப்பின் ஒரு பகுதியை கடந்து செல்ல முயன்றது. அப்போது, வேலூர் நோக்கி செல்லும் சாலையில் சென்ற அமைச்சரின் மகன் கம்பனின் கார் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இந்நிலையில், இதுகுறித்த சிசிடிவி தற்போது வெளியாகியுள்ளது.

நன்றி: நியூஸ் தமிழ் 24X7

தொடர்புடைய செய்தி