நீளமான, அழகான, ஆரோக்கியமான நகங்களை வளர்த்து பராமரிக்க பலரும் விரும்புவர். சில டிப்ஸ் மற்றும் டிரிக்ஸ்களை பயன்படுத்தினால் இது சாத்தியமாகும். எலுமிச்சை சாறு அல்லது குடைமிளகாயை கை மற்றும் கால் நகங்களில் தினமும் ஒருமுறையாவது தேய்க்க வேண்டும். பின்னர் அதனை 5 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவலாம். இது நகங்கள் வளரவும் சுத்தமாக பராமரிக்கவும் உதவுகிறது. முட்டை ஓடுகளை அரைத்து பேஸ்ட்டாக்கி நகங்களில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து கழுவினால் வலுவாகும்.