கோவாவில் 5 வயது பெண் குழந்தை காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடினர். இந்நிலையில், அலார் (52) மற்றும் பூஜா (45) தம்பதியின் வீட்டிற்கு சென்ற சிறுமி மீண்டும் வெளியே வரவில்லை. இதனையடுத்து இருவரையும் கைது செய்து விசாரித்ததில், சாமியார் ஒருவரின் பேச்சைக் கேட்டு, சிறுமியை நரபலி கொடுத்ததாக கூறியுள்ளனர். இதனையடுத்து வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு, போலீசார் விசாரித்து வருகின்றனர்.