சீனாவில் குழந்தைக்கு பெயர் வைப்பதில் ஏற்பட்ட பிரச்னையால் ஷாவோ - ஜி என்ற தம்பதி விவாகரத்து பெற்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. தங்களது மகளின் பெயருக்கு பின்னால் ஷாவோ என்றும், மகனின் பெயருக்கு பின்னால் ஜி என்றும் சேர்த்துள்ளனர். எனினும் மகனின் பெயருக்கு பின்னும் தன் பெயரே இருக்க வேண்டும் என ஷாவோ சண்டையிட்டுள்ளார். இதனால் நீதிமன்றம் வரை சென்ற நிலையில், விவாகரத்து வழங்கிய நீதிமன்றம் குழந்தைகளை வளர்க்க தாயே தகுதியானவர் எனக் கூறியுள்ளது.