நடிகர் கவுண்டமணி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

62பார்த்தது
நடிகர் கவுண்டமணி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு
நடிகர் கவுண்டமணி சென்னை கோடம்பாக்கத்தில் நளினி பாய் என்பவருக்கு சொந்தமான நிலத்தை 1996ல் வாங்கி தனியார் கட்டுமான நிறுவனத்திடம் கொடுத்து வணிக வளாகம் கட்ட ஒப்பந்தம் செய்தார். 2003 வரை கட்டுமான பணிகள் தொடங்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் கவுண்டமணியின் நிலத்தை அவரிடம் ஒப்படைக்கவும், நஷ்ட ஈடு கொடுக்கவும் உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து அந்நிறுவனம் உச்சநீதிமன்றம் சென்றது. அங்கு தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்த நீதிபதிகள் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.