துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் ரேசிங் அணி 3-வது இடம் பிடித்து அசத்தியுள்ளது. இந்நிலையில், இவரது வெற்றிக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்பி விஜய் வசந்த், நடிகர் மாதவன், பிரசன்னா, விக்ரம் பிரபு, நாகசைத்தன்யா, சிவகார்த்திகேயன், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், வெங்கட் பிரபு, ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.