பெண்ணுக்கு கருத்தடை ஆப்ரேசன் செய்த கம்பவுண்டர்

82பார்த்தது
பெண்ணுக்கு கருத்தடை ஆப்ரேசன் செய்த கம்பவுண்டர்
பீகார் மாநிலம் முபாரக்பூர் பகுதியை சேர்த்தவர் பபிதா தேவி. இவர் படோரி சாலையில் உள்ள கிளினிக்கில் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அங்கு மருத்துவர் இல்லை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் அங்கு வேலை செய்யும் கம்பவுண்டர் அந்த பெண்ணை அழைத்து சென்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். பின்னர் பெண்ணின் குடும்பத்தாரின் அனுமதி பெறாமலே வேறு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி