சேலம் பொன்னம்மாபேட்டையை சேர்ந்தவர் கோவிந்தன். மனைவி சித்ரா. கொத்தனார் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது மகன் தட்சிணாமூர்த்தி (20) என்ஜினீயரிங் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். தட்சிணாமூர்த்தி நேற்று காலை கல்லூரிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். மாசிநாயக்கன்பட்டி பகுதியில் சென்றபோது வேகத்தடையில் பைக் ஏறி இறங்கியது. நிலைதடுமாறி கீழே விழுந்தபோது, அவ்வழியாக சென்ற அரசு பஸ்சின் பின் சக்கரம் மாணவர் மீது ஏறியது. இதில் உடல் நசுங்கி பலியானார்.