கோவை மாவட்டம், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் புது தோட்டம் பகுதியில் சிறுத்தை ஒன்று சாலையில் நடந்து செல்வதை நேற்று சுற்றுலாப் பயணிகள் படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து வனத்துறையினர் கூறியிருப்பதாவது, வால்பாறை பகுதிகளில் அதிக பனி நிலவி வருவதால், வனவிலங்குகளின் இனப்பெருக்க காலமாகும். இதனால் வனப் பகுதியை ஒட்டி உள்ள சாலை அருகில் அதிகமாக வனவிலங்குகளைப் பார்க்க முடியும். வால்பாறையில் இருந்து ஆழியார் செல்லும் வரை வனப்பகுதியை ஒட்டிய சாலைகள் உள்ளன. இவ்வழியாகச் செல்லும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை துன்புறுத்தாமல், எச்சரிக்கையாக செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.