வால்பாறை: மலைப்பாதையில் வரையாடுகள்- வனத்துறை எச்சரிக்கை!

83பார்த்தது
வால்பாறை மலைப்பாதையில் வளைந்து நெளிந்து செல்லும் ரோட்டில் வரையாடுகள் அதிக அளவில் நடமாடுவதால், சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும் என இன்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். மானாம்பள்ளி மற்றும் வால்பாறை வனச்சரகங்களில் புலி, யானை, சிறுத்தை, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட விலங்குகளும், வரையாடு, சிங்கவால் குரங்குகளும் அதிக அளவில் காணப்படுகின்றன. ஆழியாறில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் வரையாடுகள் சாலையோரம் மேய்ந்து செல்வதால், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வரையாடுகளைப் பார்த்து வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தி போட்டோ எடுப்பது அல்லது செல்பி எடுப்பது தவறானது. விலங்குகளைத் துன்புறுத்துவது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்று எச்சரித்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகளைப் பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும், வனத்துறையின் அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி