வால்பாறை ஷேக்கல்முடி எஸ்டேட்டில் வசித்து வந்த வயதான பெண் யானை வயது முதிர்ச்சியால் உயிரிழந்துள்ளது. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், சுமார் 50 வயதான இந்த யானை கடந்த சில மாதங்களாக அந்த பகுதியில் சுற்றித் திரிந்து வந்தது.
வயது முதிர்ச்சியால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இன்று காலை உயிரிழந்துள்ளது. இறந்த யானையின் உடலை பரிசோதித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், தற்போது பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.