பொள்ளாச்சி: கட்டுமான தொழிலாளி மின்சாரம் பாய்ந்து படுகாயம்!

77பார்த்தது
பொள்ளாச்சி ஏபிடி பள்ளி சாலையில் தனியார் கட்டிட கட்டுமான பணியின் போது சென்ட்ரிங் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளிக்கு மின்சாரம் பாய்ந்து படுகாயம் ஏற்பட்டது. அமைதி நகரைச் சேர்ந்த இளங்கோ (45) என்ற அந்த தொழிலாளி, கட்டிடத்தின் மேல் தளத்தில் கான்கிரீட் அமைக்கும் பணிக்காக நேற்று சென்ட்ரிங் அமைத்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த உயர் அழுத்த மின்சார கம்பியில் உராய்த்ததில் மின்சாரம் பாய்ந்தது.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார், தனியார் ஆம்புலன்ஸ் உதவியுடன் இளங்கோவை மீட்டு பொள்ளாச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி