கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை - இரண்டாவது நாளாக தாயுடன் சேர்க்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் காட்டு யானை 6 நாட்கள் சிகிச்சைக்கு பின் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
அதன் 4 மாத குட்டி யானை தனியாக பிரிந்த்தால், வனத்துறையினர் குட்டியை மீட்டு தாயுடன் சேர்க்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர், ஆனால் இரவு வரை சேர்க்க முடியாததால் இரண்டாவது நாளாக குட்டியை தாயுடன் சேர்க்க வனத்துறையினர் போராடி வருகின்றனர்.