முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில் கருதப்படுகிறது. இக்கோவிலில் உண்டியல் எண்ணிக்கை நேற்று (செப்.,20) நடந்தது. உண்டியல் அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது. நிரந்தர உண்டியலில், 90 லட்சத்து 44 ஆயிரத்து 931 ரூபாய் ரொக்கமும், 142 கிராம் தங்கமும், 4 கிலோ 350 கிராம் வெள்ளியும், 9 கிலோ 995 கிராம் பித்தளையும் இருந்தது.