கோவையில் காட்டுப்பன்றிகளால் விவசாய விளைநிலங்கள் பாதிக்கப்படுவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். வனத்துறை அதிகாரிகள் நேற்று கூறும்போது, காட்டுப்பன்றிகள் அதிகம் வசிக்கும் வனப்பகுதிகளுக்கு வெளியே உள்ள இடங்களை வரைபடமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மருதமலை அடிவாரம், வடவள்ளி, கணுவாய், பன்னிமடை, தொண்டாமுத்தூர், வேடப்பட்டி, சிறுவாணி சாலை போன்ற பகுதிகளில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. விவசாய பயிர்களுக்கு சேதம் விளைவிப்பது மட்டுமின்றி, காட்டுப்பன்றிகள் திடீரென சாலையை கடப்பதால் விபத்துக்களும் ஏற்படுகின்றன. காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த ஒவ்வொரு வனப்பகுதி வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளனர்.