கோவை பெரியகடை வீதி போலீசார் புல்லுக்காடு அவுசிங் யூனிட் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்றிருந்த வாலிபர்கள் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர். அதில் அவர்கள் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர்கள் புல்லுக்காடு அவுசிங் யூனிட்டை சேர்ந்த காஜா உசைன் (26), கமலேஸ்வரன் (24), தெற்கு உக்கடத்தை சேர்ந்த அபுதாகீர் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.