15 வகையான அம்சங்களை கொண்டுள்ள 'களைவெட்டும் இயந்திரம்'

577பார்த்தது
கோவை கொடிசியா அக்ரி கண்காட்சியில் கொங்கு மண்டலங்களில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் பயன்பெறும் வகையில் அதிக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் பல்வேறு அரங்குகளில் விவசாயம் சம்பந்தப்பட்ட இயந்திரங்கள் பார்வையாளர்களை வெகுவாக கலந்து வருகிறது. குறிப்பாக காரமடை காளிஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட ஒரு இயந்திரத்தில் 15 வகையான அம்சங்களை கொண்டுள்ள 'களைவெட்டும் இயந்திரம்' பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இது குறித்து அந்நிறுவனத்தின் உரிமையாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காலிஸ் நிறுவனம் காரமடையில் இயங்கி வருகிறது. நாங்கள் விவசாயத்திற்கு முக்கிய தேவையான களை எடுத்தல், ஏறிடுதல் போன்றவை எளிய முறையில் செய்வதற்கு களை வெட்டி இயந்திரம் உருவாக்கியுள்ளோம். இதன் சிறப்பம்சங்கள் டிராக்டர் மற்றும் மினி டிராக்டர் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் நம்மால் எளிதில் செய்ய முடியும்.

குறிப்பாக, சுமார் 2. 5 அடியில் களை வெட்டுதல், மண் அமைத்தல்,
தென்னை மட்டை வெட்டுதல், மாட்டு தீவனம் வெட்டுதல், வாழைக்கு களை வெட்டுதல், தென்னைக்கு களை வெட்டுதல், போன்ற எட்டு இணைப்புகள் மூலம் 15 வகையான வேலைகளை எளிதாக செய்ய முடியும் என்றார். மேலும் கோவை கொடிசியாவில் நடைபெறும் இந்த ஐந்து நாள் வேளாண் கண்காட்சியில் இந்த இயந்திரம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் இலவச சலுகை வழங்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி